டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஹிந்தியில் ஆலியா பட், சர்வாரி, பாபி தியோல், அனில் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ஆல்பா'. ஆக் ஷன் திரில்லர் கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் சிறப்பு ரோலில் நடிக்கிறார் ஹிருத்திக் ரோஷன். இப்படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த ஒரு தகவல் பாலிவுட் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், கடந்த 2019ம் ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து வெளியான படம் வார். சூப்பர் ஹிட் அடித்த அப்படத்தில் ரா ஏஜென்ட் கபீர் என்ற ரோலில் நடித்திருந்தார் ஹிருத்திக் ரோஷன். அந்த வேடம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதனால் தற்போது நடித்து வரும் ஆல்பா படத்திலும் வார் படத்தில் தான் நடித்த அதே ஏஜென்ட் கபீர் என்ற கதாபாத்திரத்திலேயே சிறப்பு தோற்றத்தில் மீண்டும் நடிக்கிறார் கிருத்திக் ரோஷன்.