சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி | டீசலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை பேசும் படம் | பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார் | பிளாஷ்பேக்: நடிகராக ஜெயிக்க முடியாத சிவாஜி வாரிசு | நடிகை வைஜெயந்தி மாலா நலம் : மகன் தகவல் | பிளாஷ்பேக்: கருணாநிதியுடன் இணைந்து படம் தயாரித்த எம்ஜிஆர் | அறிக்கையும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை : இது அஜித் பாலிசி | விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா | கரூர் சம்பவத்தால் காலியான குஷி வசூல் |
பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட சொகுசு கார்களை இந்தியாவில் மறுபதிவு செய்து வரி ஏய்ப்பு நடத்தி விற்பனை செய்து வருவதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்காலைக்கல் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் துல்கர் சல்மானின் வீட்டிலிருந்து 2 கார்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் உள்ள மேலும் 2 கார்கள் குறித்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த கார்களை சட்டப்படி வாங்கி உள்ளதாகவும், அதனை திருப்பித் தர வேண்டும் என்றும் துல்கர் சல்மான கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது : சட்டத்திற்கு உட்பட்டே நான் கார்களை வாங்கினேன். ஆனால் எந்த ஆவணங்களையும் பரிசோதிக்காமல் சுங்கத்துறை என்னுடைய கார்களை கைப்பற்றியுள்ளது. அவற்றை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளனர்".
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.