'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி | பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை | மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு | ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா |

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி' ஆகிய படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இதனை இயக்குனர் அட்லியின், 'ஏ பார் ஆப்பிள்' புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தபோது விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதனால் தள்ளிச்சென்ற இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கம் அமைத்து நடத்தியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு இன்னும் கதாநாயகி கிடைக்கவில்லை என்பதால் ஒரு வார படப்பிடிப்பு பிறகு ஒரு மாத இடைவெளியில் விஜய் சேதுபதி மீதமுள்ள பூரி ஜெகநாத் படப்பிடிப்பிற்கு செல்வார் என கூறப்படுகிறது.