இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் | மேஜர் ரவியின் புதிய படம் 'பஹல்காம்' பூஜையுடன் அறிவிப்பு ; மோகன்லால் நடிக்கிறாரா? |

இயக்குனர்களில் ஜாம்பவானாக இருந்த பாலு மகேந்திராவும், நடிகர்களில் ஜாம்பவானாக இருந்த ரஜினிகாந்தும் இணைந்த ஒரே படம் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்'. 'நீங்கள் கேட்டவை' என்ற பக்கா கமர்ஷியல் படத்திற்கு பிறகு அதே பாணியில் பாலுமகேந்திரா இயக்கிய படம். ஆனால் படம் வெற்றி பெறவில்லை.
பாலுமகேந்திராவின் மற்ற படங்களை போல் இல்லாமல் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவானது. இந்த படத்தில் நேர்மையான போலீஸ் ஆபிசராக ரஜினிகாந்த் நடித்திருப்பார். உயர் அதிகாரியான செந்தாமரை செய்யும் ஒரு கொலையின் பழி ரஜினி மீது விழும், இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். பிறகு ரஜினி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து மீண்டும் பணியில் சேர்வதுதான் படத்தின் கதை.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மாதவி நடித்திருப்பார். நடிப்புடன் தனது அழகான கண்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார். வி.கே ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன், ஒரு விரல் கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மவுனிகாவுக்கு இதுதான் அறிமுக படமாகும். இந்த படத்தில் நடித்தபோதுதான் பாலுமகேந்திராவை காதலித்து அவரது துணைவியார் ஆனார் மவுனிகா.




