தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

தனுஷ் இயக்கம், நடிப்பில் உருவாகி, அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ள 'இட்லி கடை' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள படம்.
இந்தப் படத்தின் கதை இதுதான் என கடந்த வாரத்தில் ஒரு கதை சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா மற்றும் பலர் நடித்த 'மிஸ்டர் பாரத்' படத்தின் கதை போலவே இருக்கிறது என்று சொன்னார்கள்.
நேற்று வெளியான டிரைலரைப் பார்த்ததும் உலா வந்த அந்தக் கதை உண்மையாகத்தான் இருக்குமோ என்று எண்ண வைத்துள்ளது. இட்லி கடை வைத்திருக்கும் ஒருவருக்கும், ஸ்டார் ஹோட்டல் வைத்திருக்கும் ஒருவருக்கும் இடையிலான கதை என்று டிரைலரைப் பார்த்ததும் புரிகிறது. 'மிஸ்டர் பாரத்' படத்தில் இருக்கும் 'கட்டுமான கம்பெனி' இந்த 'இட்லி கடை'யில் ஹோட்டல் ஆக மாறியுள்ளது. கூடவே, கொஞ்சம் 'அண்ணாமலை' படத்தையும் சேர்த்து இந்த 'இட்லி'யை இந்தக் காலத்திற்கேற்ப சுட்டிருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.
வேற்று மொழியிலிருந்து கதைகளை உருவுவதை விட நமது மொழியிலிருந்து உருவுவதும் சிறந்ததுதான். என்ன அட்லிக்கு போட்டியாக எல்லாம் இப்படி சுட முடியாது ?.




