விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக பயணித்து வருபவர் உபேந்திரா. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக காளீசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். இவரது மனைவி பிரியங்கா திரிவேதி. இவரும் நடிகை தான். தமிழில் அஜித்துடன் 'ராஜா' படத்தில் ஜோடியாக நடித்தவர். இந்த நிலையில் இவர்கள் இருவரது மொபைல் போன்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன.
இந்த போன்களில் இருந்து அவர்களது நண்பர்கள் வட்டாரத்தில் உள்ள சிலருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று பணம் கேட்டு மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயம் ஒரு சில நண்பர்கள் மூலமாக உபேந்திரா மற்றும் பிரியங்கா இருவருக்குமே தெரிய வந்தது. உடனடியாக இருவருமே தங்களது சோசியல் மீடியாவில் தனித்தனி வீடியோக்களை வெளியிட்டு ''எங்களது மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதனால் அதிலிருந்து பணம் கேட்டு வரும் மெசேஜ் நாங்கள் அனுப்பியது இல்லை. தயவு செய்து அதை புறக்கணியுங்கள். எங்கள் போன்கள் மீட்கப்பட்டதும் நாங்களே தகவல் தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.