ரோபோ சங்கர் மறைவு : திரையுலகினர் அஞ்சலி | ரோபோ சங்கர் மறைவு : மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன.? | நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு |
ஸ்ரீலீலா நடிப்பில் 2019ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த படம் 'கிஸ்'. இந்த படம் 'கிஸ் மீ இடியட் ' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். நாயகியாக அஸ்வதி நடிக்கிறார். மற்றும் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஜெய்சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார், பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார். கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய அர்ஜுன் தமிழிலும் இயக்குகிறார். செப்டம்பர் மாதம் 26 ம் தேதி வெளியாகிறது.
கல்லூரி மாணவியான ஸ்ரீ லீலா கல்லூரியில் சக மாணவிகளுடன் சேட்டை செய்த காரணத்திற்க்காக கல்லூரி முதல்வரால் ஒரு நாள் தண்டனையாக வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அந்த கோபத்தில் கல்லூரியை விட்டு வெளியே வரும் ஸ்ரீ லீலா கல்லூரிக்கு வெளியில் கல்லூரி முதல்வரின் படம் பொறித்த பேனரில் கல்லை எடுத்து வீசுகிறாள்.
அந்த கல் பேனரில் பட்டு ரோட்டில் வந்து கொண்டிருக்கும் ஹீரோ காரில் படுகிறது . இதனால் அந்த கார் சுவற்றில் மோதி சேதம் அடைகிறது .இந்த சேதத்திற்கு நஷ்ட ஈடாக ஸ்ரீ லீலாவிடம் நான்கு லட்சம் கேட்கிறார். தரவில்லை என்றால் ஒரு முத்தம் கொடு அல்லது இரண்டு மாதம் தன்னுடைய உதவியாளராக வேலை செய் என்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் 'கிஸ்' படத்தின் கதை. அதே கதையுடன் தமிழில் இந்த 'கிஸ் மீ இடியட்' வெளியாக இருக்கிறது.