தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
சென்னையில் நடந்த படையாண்ட மாவீரா பட விழாவில் பேசிய தங்கர்பச்சான் ''இன்று சமூக ஊடகங்கள் 24 மணி நேரமும் பசியோடு இயங்கிக்கொண்டு இருக்கிறது. யாராவது எதையாவது பேசணும். அதை பெரிதாக்கி வருமானம் ஈட்ட வேண்டும் என்று அவர்கள் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். மனநோயாளிகள் அதில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் சொந்த பெயரில் இயங்குவது இல்லை. யாரோ சொல்லி, அரசியல்வாதிகள் சொல்லி அவர்கள் தாக்குகிறார்கள். கமென்ட் என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார்கள்.
இந்த மண், மக்களுக்கு தேவையானதை தவிர்த்து, அதை முடக்கி வேறு திசைக்கு கொண்டு செல்கிறார்கள். சமூக ஊடகத்தில் இயங்குவது பெரிய தொழில் ஆகிவிட்டது. அவ்வளவு பணம் அதில் இருக்கிறது. எல்லாரும் டாக்டர் மாதிரி பேசுகிறார்கள். அனைத்தையும் தெரிந்தது மாதிரி பேசுகிறார்கள். ஏதாவது நல்லது செய்யணும்னு யாராவது வந்தால் அவர்களை தாக்கியே காலி பண்ணுகிறார்கள். எது சொன்னாலும் கமென்ட் போடுவார்கள்.
இப்போது நல்ல சினிமா வெற்றி பெறுவதை விட, மக்களுக்கு பலன் தராத படங்கள் ஓடுகிறது. அந்த படங்கள்தான் கொண்டாடப்படுகிறது. அவர்கள்தான் நேரத்தையும், பணத்தையும் பறிக்கிறார்கள். அவர்களிடம் அரசியல்வாதிகளை விட அதிக பணம் இருக்கிறது. அதற்கு சமூக ஊடகங்களும் காரணம், நாலைந்து நடிகர்கள்தான் என்ன படம் வரணும்னு முடிவு செய்கிறார்கள். ஒரு படம் எப்படி இருக்கிறது என்று சொல்வது இல்லை. இந்த படம் 400 கோடி வசூலா? 500 கோடி வசூலா என்று சிந்திக்க வைக்கிறார்கள்'' என்று பொங்கினார்.