ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் | சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் 'மதராஸி'.
மதராஸி என தலைப்பு வைத்துள்ளதால் இந்தப் படம் மும்பை போன்ற இடங்களில் நடக்கும் கதையோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்தது. ஹிந்தி பேசும் மக்கள் தமிழர்களை மதராஸி என்றழைப்பது வழக்கம்.
ஆனால், படத்தின் கதை தமிழகத்தில்தான் நடக்கிறதாம். வில்லன் வித்யுத் ஜமால், படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை மதராஸி என அழைப்பதால் படத்திற்கு அந்தப் பெயரை வைத்துள்ளாராம் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.
மேலும், படத்தின் கதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். “மேற்கத்திய நாடுகளில் ஒரு முக்கியமான பிரச்னை உள்ளது, அது மெல்ல மெல்ல நம் நாட்டிலும் பரவி வருகிறது. இந்தப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு கதையை எழுதினேன். இதன் தலைப்பு வித்தியாசமானது மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்று நான் உணர்ந்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.