படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

காதல், வழக்கு எண், கல்லூரி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல், அவர் இயக்கி முடித்துள்ள ரா..ராஜ்குமார் படம் வெளிவரவில்லை. இதற்கிடையில் அவர் தற்போது முழுநேர நடிகராகி விட்டார். சமீபத்தில் வெளியான டிஎன்ஏ, குடும்பஸ்தன், பறந்து போ படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது. தற்போது வெளியாக இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் அவர் தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா ஜோடியாக நடித்திருக்கிறார். படம் வருகிற 5ம் தேதி வெளிவருகிறது.
இந்த படம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் பல வருடங்கள் இயக்குநராக இருந்து வந்திருக்கிறேன். நடிகர்களின் மூலம் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெடுப்பதைப் பார்ப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. ஆனால், மறுபுறம் நிற்கும் நடிகராக இருப்பது சுலபமல்ல என்பதைக் கற்றுக் கொண்டேன். அதாவது நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினமானது.
நான் இணைந்த ஒவ்வொரு திட்டமும் சிறந்த இயக்குநர்களின் படைப்பாக இருந்தது. அதுபோலவே 'காந்தி கண்ணாடி'யை ஷெரீப் விவரித்தவுடன் உடனே சம்மதித்தேன். மிகவும் அழகான, உணர்ச்சிமிகு திரைக்கதை அது. இறுதிப் படத்தைப் பார்த்தபோது அவர் எவ்வளவு நன்றாக உருவாக்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி.
இந்த படத்தில் கே.பி.ஒய் பாலா நிச்சயமாக கோலிவுட்டின் 'கண்டெண்ட் டிரிவன் ஸ்டார்' ஆகப் போகிறார். அர்ச்சனா ஒரு அபாரமான திறமைசாலி, அவருடன் திரை பகிர்ந்தது பெருமையாக இருந்தது. காந்தி கண்ணாடி பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். என்றார்.