மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்க முடியும். பொதுவாக ரஜினி படம் என்றாலே குழந்தைகள், பெண்கள் என பலரும் விரும்பிப் போய்ப் பார்ப்பார்கள். ஆனால், 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் குடும்பத்துடன் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்து கடைசியாக 1989ம் ஆண்டு வெளிவந்த 'சிவா' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 36 ஆண்டுகளாக அவரது படங்களுக்கு அந்த சான்று கிடைத்ததில்லை. குடும்பத்துடன் பார்க்கும்படியாக 'யு' சான்றிதழ் படங்கள்தான் இருந்தது. ஒரு சில படங்கள் 'யு/ஏ' சான்று பெற்றவை.
'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் என்பதால் வசூலும் குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகளை வீட்டில் விட்டு படம் பார்க்க வருவதற்கு பெண்கள் தயங்குவார்கள். ஆண்கள் மட்டுமே தியேட்டர் பக்கம் வந்தால் வசூல் அதிகம் கிடைக்காது. இதனால், ரஜினி ரசிகர்கள் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பி 'யு-ஏ' சான்றிதழாவது பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.