செல்வராகவன் நடிக்கும் ‛மனிதன் தெய்வமாகலாம்' | கடைசி படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்கை இணைக்க சொன்ன நடிகர் | மார்க்கெட்டை பிடிக்க உத்தரவாதம் கொடுக்கும் நடிகை | 27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ | நேர்மையாக இருந்தால் ஜொலிக்கலாம் நடிகர் குரு லக் ஷ்மண் | பிளாஷ்பேக்: பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் முதல் வண்ணத்திரைக் காவியங்களை அலங்கரித்த 'மக்கள் திலகம்' எம் ஜி ஆர் | ராஜபார்ட் ரங்கதுரை, வாலி, காஞ்சனா 3 - ஞாயிறு திரைப்படங்கள் | படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' |
நடிப்பு, கார் பந்தயம் என இரட்டை சவாரி செய்யும் நடிகர் அஜித், தொடர்ந்து கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சில போட்டிகளில் அவரது ‛அஜித்குமார் ரேஸிங்' அணி வெற்றிப்பெற்றும் அசத்தியது.
இந்த நிலையில், இத்தாலியில் நடந்து வரும் ‛ஜிடி 4' யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்றிருந்தார். இந்த கார் பந்தயத்தில் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் அதன் மீது அஜித்தின் கார் மோதியது. இதில் அஜித் ஓட்டிய காரின் இடதுபுறம் சேதமடைந்து விபத்துக்குள்ளானது. கார் பந்தயத்தில் அவ்வப்போது விபத்தில் சிக்கும் அஜித், இந்த முறை வேறொரு காரின் தவறால், அதன்மீது மோதாமல் இருக்க முயன்றும் விபத்தில் சிக்கியது அவரது துரதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.