ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா |

2015ம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வெளியான 'இசை' படத்திற்கு பிறகு நடிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 'கில்லர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இப்படத்தை கோகுலம் மூவிஸ் மற்றும் ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கோட் ஷூட் உடையில் ஸ்டைலான எஸ்.ஜே. சூர்யா, பிரீத்தி அஸ்ராணியை கடத்தி செல்வது போல் உள்ளது. குறிப்பாக பின்னனியில் கில்லர் படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா பிரத்யேகமாக வாங்கிய பி.எம்.டபிள்யூ கார் உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




