அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் 'கூலி' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'மோனிகா' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இத்தாலிய நடிகையான மோனிகா பெலூசியின் ரசிகர்களாக இருப்பதால் இப்படி ஒரு பாடலை உருவாக்கி இருக்கிறார்கள் லோகேஷ், அனிருத்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் பேசுகையில், “நானும், அனிருத்தும் இத்தாலி நடிகையான மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள். பாடல்கள் என்று வரும் போது, அது முழுக்க முழுக்க அனிருத்தின் முடிவு. நான் அவரை முழுமையாக நம்புகிறேன். மோனிகா பெலூசியின் உலகளாவிய கவர்ச்சிக்கு இந்தப் பாடல் ஒரு அர்ப்பணிப்பு. பூஜா ஹெக்டேவின் சிவப்பு நிற உடை, 'மலேனா' மற்றும் 'ஸ்பெக்டர்' படங்களில் மோனிகாவின் அடையாளமாக இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது யு டியுப் தளத்தில் இந்தப் பாடல் தமிழில் 12 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.