நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் வாரிசுகளுக்குப் பஞ்சமேயில்லை. ஒரே குடும்பத்தில் இருந்து வந்த சினிமா கலைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கடந்த வாரம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி 'பீனிக்ஸ்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் எப்படி ஓடியிருந்தாலும் இன்று படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள்.
கடந்த வாரம் மகன் வாரிசு அறிமுகமான நிலையில், இந்த வாரத்தில் இன்று வெளியாகி உள்ள 'ஓஹோ எந்தன் பேபி' படம் மூலம் மற்றொரு வாரிசு அறிமுகம் நடக்கிறது.. நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டியுள்ள நிலையில் ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
இது தவிர மற்றொரு வாரிசாக 'மிசஸ் அண்ட் மிஸ்டர்' படம் மூலம் நடிகை வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா விஜயகுமார் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.