நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

உலக அளவில் வெளியாகும் திரைப்படங்களின் ரேட்டிங், அவற்றின் தகவல்கள் அடங்கிய இணையதளம் ஐஎம்டிபி. அதில் கிடைக்கும் ரேட்டிங் வைத்து தங்களது படங்களை திரைப்படத் துறையினர் விளம்பரப்படுத்திக் கொள்வார்கள்.
இந்த 2025ம் ஆண்டின் அரையாண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களின் டாப் 10 பட்டியலை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஹிந்தித் திரைப்படமான 'சாவா' முதலிடத்தில் உள்ளது. தமிழ்ப் படங்களான 'டிராகன்' 2வது இடத்திலும், 'ரெட்ரோ' 5வது இடத்திலும், 'விடாமுயற்சி' 10வது இடத்திலும் இடம் பிடித்துள்ளன.
ஹிந்தித் திரைப்படங்களான 'தேவா' 3வது இடத்திலும், 'ரெய்டு 2' 4வது இடத்திலும், 'த டிப்ளமோட்' 6வது இடத்திலும், 'சித்தாரே ஜமீன் பர்' 8வது இடத்திலும், 'கேசரி சேப்டர் 2' 9வது இடத்திலும், மலையாளப் படமான 'எல் 2 எம்புரான்' 7வது இடத்திலும் உள்ளன. இந்த டாப் 10 பட்டியிலில் ஒரு தெலுங்குப் படம் கூட இடம் பெறவில்லை.
தமிழில் வசூல் ரீதியாக அதிக வசூலைக் குவித்த 'டிராகன்' 2வது இடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், தோல்விப் படங்களான 'ரெட்ரோ, விடாமுயற்சி' ஆகியவை அந்தப் பட்டியலில் இருப்பது ஆச்சரியமே.