தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
1978ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த படம் 'படுவாரல்லி பாண்டவரு'. இந்த படத்தை புட்டண்ணா கனகல் இயக்கி இருந்தார். அம்ரீஸ், ராமகிருஷ்ணா, ஜெய் ஜெகதீஷ், ஆரத்தி, சுபா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மகாபாரத கதாபாத்திரங்களான 5 பஞ்சபாண்டவர்களின் குணாதிசயங்களை பெற்ற 5 சகோதரர்களின் சமூக கதை. ஒரு பெரிய பண்ணையாரை எதிர்த்து இவர்கள் எப்படி போராடி பெற்றி பெறுகிறார்கள் என்பது திரைக்கதை. இந்த படம் கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் 'மனவூரி பாண்டவலு' என்ற பெயரில் ரீமேக் ஆனது. பாபு இயக்கினார், கிருஷ்ணன் ராஜூ, சிரஞ்சீவி, முரளி மோகன், ஷோபா, கீதா உள்ளிட்டோர் நடித்தனர். அங்கும் படம் வெற்றி பெற்றது. ஹம் பாஞ்ச் என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது.
இதே படம் தமிழில் 'பண்ணைபுரத்து பாண்டவர்கள்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதனை எடிட்டர் பி.லெனின் இயக்கினார். ஜெயசாரதி மூவீஸ் சார்பில் நடிகர் ஜெயச்சந்திரன் தயாரித்து, நடித்தார். அவருடன் சரத்பாபு, சரிதா, கீதா, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீகாந்த், சுருளிராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெற்றி பெறவில்லை. காரணம் மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் நடித்திருந்ததும், தமிழ் முன்னணி நடிகர்கள் நடிக்கவில்லை என்றும், ஆக்ஷன் கதையை காமெடி கதையாக மாற்றியதும் தோல்விக்கு என்று காரணம் கூறப்பட்டது. பின்னாளில் இந்த கதையை இன்ஸ்பிரேஷனாக கொண்டுதான் அஜித் நடித்த 'வீரம்' படத்தை சிவா இயக்கினார்.