படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. 2000ம் ஆண்டில் வெளிவந்த 'டாலர் ட்ரீம்ஸ்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் 'ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேய்ஸ், லீடர், லைப் இஸ் பியூட்டிபுல், அனாமிகா, பிடா, லவ் ஸ்டோரி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நயன்தாரா நடித்த 'அனாமிகா' படம் தமிழிலும் வெளியானது. தற்போது தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'குபேரா' படத்தை இயக்கியுள்ளார். ஜுன் மாதம் 20ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
சேகர் கம்முலா திரையுலகத்தில் இயக்குனராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதற்காக நடிகர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அது குறித்து, “எனது டீன் ஏஜ் பருவத்தில் சிரஞ்சீவி சாரை ஒரு முறை பார்த்தேன். அருகில் இருந்து பார்த்தேன். எனக்கு அவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்று தோன்றியது, அவ்வளவுதான்.
நான் 25 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். எங்களது குழு 'கொண்டாடுவோம்' என்று சொன்னதை எனக்கு நினைவூட்டியவர் சிரஞ்சீவி. பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த ஆளுமை அவர். 'உன் கனவுகளைத் துரத்து, வெற்றி நம்மைப் பின் தொடரும்,' என்ற நம்பிக்கையை சிரஞ்சீவி எனக்குக் கொடுத்தார். எனவே, எனது 25 ஆண்டு பயணத்தை அவர் முன்னிலையில் கொண்டாட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. நன்றி சார். இந்தத் தருணங்களில் மட்டுமல்ல, எனது டீன் ஏஜ் பருவத்திலிருந்தே நீங்கள் என் முன் இப்படித்தான் இருக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.