ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
கமலின் தக் லைப் படத்திற்கு பின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு 49வது படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். சமீபத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருக்கிறார்.
இதனால் இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49 ஆகிய படங்களின் நிலைமை இடியாப்ப சிக்கலில் உள்ளது. டான் பிக்சர்ஸ் தரப்பில் சிம்பு 49 படத்திற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இட்லி கடை, பராசக்தி படத்தை திரைக்கு கொண்டு வாங்க. பிறகுதான் கால்ஷீட் தருவதாக சிம்பு தெரிவித்துள்ளாராம். இதனால் சிம்பு 49 படம் உருவாவதில் தாமதம் ஆகும் என தெரிகிறது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் உடனடியாக சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.