இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
1949ம் ஆண்டு வெளியான 'வேலைக்காரி' என்ற படம் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பல புதுமைகளை அறிமுகப்படுத்தியது. தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டத்தில் படத்தின் கதைகளை காட்சிகளே நகர்த்தி செல்லும், சில படங்களில் படத்தில் வரும் கேரக்டர் கதையை சொல்லும். முதன் முதலாக வாய்ஸ் ஓவர் (பின்னணி குரல்) எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது இந்தப் படத்தில்தான்.
இந்த படத்தின் இன்னொரு புதிய முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. நடிகர்கள் வசனம் பேசும்போது கேரக்டரை நோக்கி கேமரா நகரும், ஆனால் இந்த படத்தில் வசனம் பேசும் கேரக்டர்கள் பேசியபடியே கேமரா நோக்கி நகர்வார்கள்.
இப்போதெல்லாம் படம் வெற்றி பெற்றால் இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் கார் பரிசளிப்பார். இந்த படத்தின் கதை, வசனத்தை சிறப்பாக எழுதியதற்காக படத்தின் வெற்றி விழாவில் சி.என்.அண்ணாதுரைக்கு கார் பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர்.
இந்த படம் அண்ணாதுரையின் 'வேலைக்காரி' நாடகமாக இருந்தாலும், அதனுடன் அலெக்ஸாண்ட்ரே டுமாஸ் நாவலான 'தி கவுண்ட் ஆப் மான்டே கிறிஸ்டோ ' நாவலின் சில கூறுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த படத்தின் கதையை அண்ணாதுரை 3 நாட்களில் ஆயிரம் பக்கங்களில் எழுதிக் கொடுத்தார்.
கே.ஆர்.ராமசாமி டி.எஸ்.பாலையா, எம்.என். நம்பியார், வி.என்.ஜானகி, எம்.வி.ராஜம்மா மற்றும் டி.பாலசுப்பிரமணியம் உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தது. ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். அண்ணாதுரையின் அரசியல் வளர்ச்சிக்கு இந்த படம் பெரிதும் உதவியது.
இந்த படம்தான் அண்ணாதுரைக்கு 'பேரறிஞர்' என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது. கருணாநிதிக்கு 'பராசக்தி' போன்று அண்ணாதுரைக்கு 'வேலைக்காரி' படம் அமைந்தது. முதன் முதலாக இயக்குனர்களை விட எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படமும் இதுதான். டைட்டில் கார்டில் அண்ணாதுரை பெயர் வரும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்ததும் இந்த படத்தில்தான்.