மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு |
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைப். வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை அடுத்து புதுமுகங்களை வைத்து படம் இயக்கப் போவதாக தக் லைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது கூறிய மணிரத்னம், அந்த படத்திற்கு சரியான நடிகர்கள் கிடைக்காத பட்சத்தில் வேறு ஒரு படத்தை இயக்குவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நேரத்தில் தற்போது சிம்பு நடிக்க இருந்த 49வது படத்தின் தயாரிப்பு பணிகள் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சிம்புவிடத்தில் அந்த கால்சீட்டை வாங்கி அவரை வைத்து தனது புதிய படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம், தக் லைப் படங்களில் நடித்த சிம்பு மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.