'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? | நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | கே.ஜி.எப் தயாரிப்பாளருடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன் | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி | 'பூ' சசி படத்தில் லப்பர் பந்து சுவாசிகா | 'தக் லைப்' கூடவே வரும் மூன்று படங்கள் : தியேட்டர்கள் கிடைக்குமா ? |
ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரவிமோகன்-பாடகி கெனீஷா காதல் விவாதபொருளாகி இருக்கிறது. ரவிமோகன் பற்றி கடுமையாக விமர்சித்து ஆர்த்தி சில அறிக்கைகள் வெளியிட்டிருந்தார். இருவருமே ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கண்டித்தது.
பாடகி கெனீஷா 'என்னை பற்றி அவதூறு பதிவுகளை 48 மணி நேரத்தில் நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சமூக வலைத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு உள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு ரவி மோகன் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் “நடிகர் ரவி மோகன் திருமண சர்ச்சை தொடர்பான அனைத்து அவதூறு செய்திகளையும் 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். பேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும். அப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த பதிவுகள் நீக்கப்படவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என குறிப்பிடப்பட்டு உள்ளது.