இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை இரட்டையர்கள். இசை கற்றது எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம். 1914ம் ஆண்டு பிறந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு, 1976ம் ஆண்டு வரை இசையமைத்து வந்தார். பிறகு பக்கவாதத்தால் படுத்த படுக்கையானார்.
அந்த சமயத்தில்தான், எம்.எஸ்.விஸ்வநாதன், அவருக்காகவே இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சி மூலம் வசூலான ஒருலட்சம் ரூபாயை சுப்பையா நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கினார். 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய் என்பது இன்றைக்கு பல கோடி. 1979-ம் ஆண்டு மறைந்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
''மெல்லிசை மன்னர்கள் என்று எங்களுக்குப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். திரை இசையில், அந்த மெல்லிசை எப்படி இருக்க வேண்டும் என்பதை, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடமும், ஜி.ராமநாதனிடமும்தான் கற்றுக் கொண்டோம். இவர்களை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறோம்' என்று மெல்லிசை மன்னர்கள் பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் 46வது நினைவு நாள் இன்று.