‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? |

தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. பெப்சியின் தலைவராக இயக்குனர் ஆர் கே செல்வமணி தொடர்ந்து படங்களின் தோல்விக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், இப்போதைய தமிழ் சினிமாவின் போக்கு எப்படி வீழ்ச்சிக்கு வித்திடுகிறது என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜின் என்கிற படத்தின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார் ஆர்கே செல்வமணி. அப்போது அவர் பேசும்போது, “இப்போதெல்லாம் பெரும்பாலான வளர்ந்து வரும் கதாநாயகர்கள் யாருமே ஒரு இயக்குனரிடம் நேரடியாக கதை கேட்பது என்பது குறைந்து விட்டது. அவரிடம் மேனேஜர்களாக இருப்பவர்களும் உதவியாளர்களும் தான் கதையை கேட்கிறார்கள். இதனால் இயக்குனருக்கும் ஹீரோவுக்குமான ஒரு நட்பு, உறவு துண்டிக்கப்படுகிறது.
தவறான புரிதல் உருவாகிறது. இதை வளர்ந்து வரும் ஹீரோக்கள் தவிர்க்க வேண்டும். தங்களது உதவியாளர்கள், மேனேஜர்கள் மூலமாக கதை கேட்பதை நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் கதாசிரியர்களிடம் நேரடியாக அமர்ந்து முழு கதையை கேட்டால் படத்தின் தோல்வியையும் தவிர்க்கலாம். தங்களது திரையுலக பயணத்திலும் தொடர்ந்து வெற்றியை சந்திக்கலாம்” என்று கூறியுள்ளார்.




