சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
பெங்களூரு : நடிகை ருக்மணி விஜயகுமாரின், 'ஹேண்ட் பேக்' மற்றும் வைர மோதிரங்களை திருடிய வாடகை கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
கன்னட திரைப்பட நடிகை ருக்மணி விஜயகுமார், பரதநாட்டிய கலைஞராகவும் புகழ் பெற்றவர். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம், ரஜினியின் கோச்சடையான், மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர், பெங்களூரு கப்பன் பூங்காவில் தினமும் நடைபயிற்சி செய்வது வழக்கம். இம்மாதம் 11ம் தேதி காலை, காரில் வந்த ருக்மணி, சின்னசாமி விளையாட்டு அரங்கத்தின் கேட் எண் 18ல் காரை நிறுத்தினார். தன் விலை உயர்ந்த ஹேண்ட் பேக், வைர மோதிரங்களை காரில் வைத்துவிட்டு, நடைபயிற்சிக்குச் சென்றார். ஏதோ ஞாபகத்தில் கார் கதவை 'லாக்' செய்ய மறந்துவிட்டார். நடைபயிற்சியை முடித்து, திரும்பி வந்து பார்த்தபோது, ஹேண்ட் பேக், வைர மோதிரங்கள் திருடு போனது தெரிந்தது.
ஹேண்ட் பேக்கிலும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. அவர் உடனடியாக கப்பன் பூங்கா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சம்பவ இடத்தை சுற்றிப் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். காரில் இருந்து பொருட்களை திருடிய நபரை அடையாளம் கண்டனர்.
முகமது, 30, என்பவரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இவர் வாடகை கார் ஓட்டுநர். சம்பவத்தன்று, நடிகை ருக்மணி தன் காரை 'லாக்' செய்யாமல் சென்றதை கவனித்தார். இதனால், காரில் இருந்த பொருட்களை திருடியதாக முகமது ஒப்புக் கொண்டார்.
நடிகைக்கு சொந்தமான, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹேண்ட் பேக், அதில் இருந்த 75,000 ரூபாய் மதிப்புள்ள பர்ஸ், 9 லட்சம் ரூபாய் விலையுள்ள 'ரோலக்ஸ்' கைக்கடிகாரம், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரங்கள் உட்பட, மொத்தம் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.