சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் கர்நாடக இசை பாடல்களே வந்தது. ஜி.ராமநாதன் கர்நாடய இசை பாடல்களை எளிமை ஆக்கினார். அதற்கு பிறகு வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் மெல்லிசை பாடல்களை தந்தார், இளையராஜா கிராமிய பாடல்களை கொண்டு வந்தார், ஏ.ஆர்.ரகுமான் ஜுபி இசை மற்றம் மேற்கத்திய இசையை கொண்டுவந்தார்.
இவைகளுக்கு இடையில் சென்னைக்கென்றே பிரத்யேகமாக உள்ள கானா பாடல்களும் சினிமாவிற்கு வந்தது. சென்னை ஒரு காலத்தில் கடற்கரையை நம்பிய நகரமாக இருந்து. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மக்கள், கப்பலுக்கு பாரம் சுமக்க செல்லும் மக்கள் தங்கள் களைப்பு நீங்க, எந்த ராக குறிப்பும் இல்லாமல். மனதில் உள்ளதை மனம்போன போக்கில் பாடியதுதான் கானா பாடல்.
இந்த பாடல் முதன் முறையாக சினிமாவுக்குள் வந்தது, 'பொம்லாட்டம்' படத்தில். முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய இந்த படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு, வெண்ணிற ஆடை மூர்த்தி, சோ, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் சோவும், மனோரமாவும் ஜாம்பஜாரில் வசிப்பவர்களாக சென்னை பாஷை பேசி நடித்திருந்தார்கள். இதையொட்டி சென்னைக்கே பிரத்யேகமான கானா பாடலை சேர்க்க விரும்பினார் முக்தா சீனிவாசன். அந்த பாடல்தான்,
'வா வாத்யாரே ஊட்டாண்ட
நீ வராங்காட்டினா நா உடமாட்டேன்.
ஜாம்பஜார் ஜக்கு,
நான் சைதா பேட்டை கொக்கு....'
என்பதாக அமைந்தது அந்த பாடல். முதல் கானா பாடலை பாடிய பெருமை மனோரமாவுக்கு கிடைத்தது. பாடலை எழுதியவர் கவிஞர் வாலி, அவருக்கு சென்னை ஸ்லாங் தெரியாததால் கானா பாடகர் எம்.எல்.கோவிந்த் என்பவரின் உதவியுடன் இந்த பாடலை எழுதினார். வி.குமார் இசை அமைத்தார். அதன் பிறகு அவ்வப்போது கானா பாடல்கள் படங்களில் இடம்பெற்றது. என்றாலும் தேவாவின் வருகைக்கு பிறகு கானா பாடல்கள் முழுமையான திரைவடிவம் பெற்றது.