மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தில்லுக்கு துட்டு (டிடி) பட வரிசையில் தற்போது சந்தானம் நடித்து வரும் படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. தி ஷோ பீப்பிள் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் போயனப்பள்ளி தயாரிக்கிறார். வருகிற மே 16ம் தேதி படம் வெளியாகிறது.
படம் பற்றி சந்தானம் கூறியிருப்பதாவது: 'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றிக்கு பிறகு அதே மாதிரியான படங்களை ரசிகர்கள் விரும்பினார்கள். அதனால் 'டிடி ரிட்டர்ன்ஸ்' வரை நடித்தேன். இதன் அடுத்த கட்டம்தான் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இதில் வழக்கத்தை விட பல கூடுதல் சிறப்புகள் இருக்கு. நான் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம். கூடவே இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகன் இணைந்திருக்கிறார்கள். அதோடு இந்த படத்தில் ஹாரர், காமெடி தாண்டி நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது.
நான் சினிமா விமர்சனம் செய்யும் யூடியூப்பராக நடிக்கிறேன். இந்த விமர்சனத்தால் எனக்கு ஒரு எதிர்பாராதவிதமான சம்பவம் நடக்கிறது. அதற்கு பிறகு என்னென்ன சிக்கல்கள் வருகிறது. அதை சமாளித்து எப்படி மீள்கிறேன் என்பதுதான் கதை.
படத்தின் நாயகி கீத்திகா திவாரி, தெலுங்கில் இருந்து தமிழுக்கு வருகிறார்; அவருக்கு படத்தில் இரண்டு கெட்அப் இருக்கிறது. தவிர நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, 'லொள்ளு சபா' மாறன், மொட்டை ராஜேந்திரன்னு எனது டீம் அப்படியே படத்தில் இருக்கிறது. என் அம்மா அப்பாவா கஸ்தூரியும் நிழல்கள் ரவியும் படம் முழுவதும் வர்றாங்க. தங்கையாக யாஷிகா ஆனந்த். அண்ணன் - தங்கை கலாய்க்கற சீன்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அது இந்த படத்தில் நிறையவே இருக்கும்.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி, 'தில்லுக்கு துட்டு'ல இருந்து பல படங்கள் என்னோட பயணிக்கிறார். லைட்டிங், மேக்கிங் இரண்டிலும் ரொம்ப வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கார். இசையமைப்பாளர் அப்ரோவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். என்றார்.