ஐ அம் பேக் ; மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பிய ஸ்ருதிஹாசன் | குடும்பத்துடன் நேரில் சென்று மோகன்லாலை சந்தித்த பஹத் பாசில் | தெலுங்கானா முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன துல்கர் சல்மான் | சொந்த வீட்டிலேயே கொடுமை : விஷால் பட நடிகை கண்ணீருடன் புகார், பரபரப்பான வீடியோ | லிப்லாக் காட்சிகளுக்கு 'நோ' சொல்கிறார் நிதி அகர்வால் | 2டி நிறுவனம் படத்தயாரிப்பை நிறுத்தியதா? | இளையராஜா பேரன்: இசையமைப்பாளர் ஆவது எப்போது? | ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா |
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் 'இட்லி கடை' இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் தற்போது சில நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இட்லி கடை படத்திற்காக ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த கிராமத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் பிரிக்காமல் இருந்த செட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர். பலத்த காற்றின் காரணமாக தீ பற்றி எரிவதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றதாக கூறுகின்றனர். அந்த கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்ததால், தீ விபத்து ஏற்பட்டபோது, தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இல்லை என தகவல் உறுதிசெய்யப்பட்டது.