ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான கேம் சேஞ்ஜர் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தற்போது புஜ்ஜி பாபு சனா இயக்கும் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க, சிவராஜ் குமார், ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை முடித்ததும் அடுத்தபடியாக அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங், அனிமல் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம் ராம்சரண். அப்படத்திற்கு டெவில் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.