எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் |

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷின் 51வது படமாக 'குபேரா' உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிப் சார்ப், பாக்யராஜ், சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. ஆனால் இதற்கிடையில் ராஷ்மிகாவிற்கு காலில் அடிப்பட்டதால் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதமிருந்தது. தற்போது இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பை தனுஷ் மற்றும் ராஷ்மிகா இருவரையும் வைத்து ஏப்ரல் 10ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இவ்வருடம் ஜூன் 20ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.