300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எம் ராமநாதன், 72, உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் இன்று(ஏப்., 7) காலை காலமானார்.
நடிகர் சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் ராமனாதன். இவரது தயாரிப்பில் வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி, பிரம்மா, உடன்பிறப்பு, வில்லாதி வில்லன் ஆகிய படங்களில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் விஜயகாந்த் நாயகனாக நடிக்க, பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்ச் செல்வன் படத்தையும் ராமனாதன் தயாரித்துள்ளார். வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவரின் உயிரின் இன்று பிரிந்தது.
ராமனாதனுக்கு பிரமிளா என்ற மனைவியும் காருண்யா, சரண்யா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் சென்னை வந்ததும் புதன் கிழமையன்று சென்னையில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.