எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா |
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில், ஏப்ரல் 4ம் தேதி இரவு 8 மணி முதல் டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் தொடங்குகிறது.
குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில், இந்த படம் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாம். அதோடு இந்த படத்தை எடிட் செய்து விட்டு பார்த்தபோது அதிகமான டைம் கொண்டதாக இருந்ததால், அதிகப்படியான நீளம் கொண்ட பல காட்சிகளை ஷார்ப்பாக கட் பண்ணி உள்ளாராம் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த வகையில் இந்த படம் தொய்வு என்பது இல்லாமல் அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். குறிப்பாக விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை முழு திருப்திப்படுத்தாத நிலையில் இந்த படம் 100 சதவீதம் திருப்திப்படுத்தும் என்றும் அப்படக் குழுவில் கூறுகிறார்கள்.