நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அரசியலில் தீவிரமாக பணியாற்ற வேண்டி அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், தொடர்ந்து நடிப்பேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
“எனக்கு பணம் தேவைப்படும் வரை சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதே சமயம் எனது அரசு வேலைகள், அரசியல் வேலைகள் பாதிக்காத அளவில் அது இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
பவன் கல்யாண் தற்போது 'ஹரிஹர வீர மல்லு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து 'ஓஜி' என்ற படத்தில் அவர் இன்னும் நடித்து முடிக்க வேண்டும். 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்திற்கு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. வேறு சில படங்கள் பேச்சு வார்த்தையுடன் நிற்கிறது.
அரசியல் கட்சி நடத்த பல கோடி பணம் தேவை. அதை சினிமா மூலம் சம்பாதித்து செலவிடும் எண்ணத்தில் பவன் இருக்கிறார் எனச் சொல்கிறார்கள்.