காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பொதுவாக ரஜினி படங்கள் தோல்வி அடைவதில்லை. குறைந்தது மினிமம் கியாரண்டி அவரது படங்களுக்கு இருக்கும். அப்படி இருந்தும் சில படங்கள் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அதில் முக்கியமான படம் 'சிவப்பு சூரியன்'. பிரபல இயக்குனர் முக்தா சீனிவாசன் இயக்கி இருந்தார். ரஜினியுடன் ராதா காதலியாகவும், சரிதா அக்காவாகவும் நடித்திருந்தார்கள். எம்.கர்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
1983ல் துடிக்கும் கரங்கள், தாய் வீடு படங்களின் வெற்றிக்குப் பிறகு முக்தா சீனிவாசனின் இயக்கத்தில் சிவப்பு சூரியன் வெளியானது. படத்தின் பெயரே ஆக்ஷனுக்குரிய கம்பீரத்துடன் இருந்ததால் ரசிகர்களிடம் இயல்புக்கு அதிகமாகவே எதிர்பார்ப்பு இருந்தது.
சிவப்பு சூரியனின் கதையை பீட்டர் செல்வராஜ் எழுதியிருந்தார். இதில் ரஜினி கடற்படை அதிகாரி . அவரது சகோதரி சரிதாவும் கணவரும் திடீரென காணாமல் போகிறார்கள். அவர்களை ரஜினி தேடி கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை. இது விமர்சனத்திற்கே தகுதியற்ற படம் என்று பலரும் விமர்சித்தனர். 'சிவப்பு சூரியன் விமர்சனம்' என்று குறிப்பிட்டு சூரியனை பற்றி விஞ்ஞான தகவல்களை வெளியிட்டிருந்தது.
'இந்த மாதிரி இன்னும் நாலு படங்கள் வேண்டாம். இரண்டு படங்களில் ரஜினி நடித்தாரானால் போதும், சூப்பர் ஒருபக்கமும், ஸ்டார் ஒரு பக்கமுமாய் கழன்று போகும்'. என்று மிக கடுமையாக விமர்சித்தன. இந்த படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினி கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்த தொடங்கினார்.