சென்னையில் மீண்டும் வீடு வாங்கிய மணிமேகலை | ''விவரிக்க வார்த்தையே இல்லை'': லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜா நெகிழ்ச்சி | வல்லவன் ஒருவன், முள்ளும் மலரும், அண்ணாத்த - ஞாயிறு திரைப்படங்கள் | அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? | ரீ-ரிலீஸில் மோதும் ரவி மோகன், சிவகார்த்திகேயன் | இயக்குனராக அறிமுகமாகும் எஸ்.பி.பி. சரண் | சிம்பு கைவிட்ட கதையை பிடித்த சிவகார்த்திகேயன் | பிளாஷ்பேக் : கிராமங்களில் திரைகட்டி காட்டப்பட்ட சுஹாசினி படம் | இயக்குனர் சீமா கபூரின் சுயசரிதை வெளியீடு : திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | இறுதி கட்டத்தில் '3பிஎச்கே' |
தனுஷ் நடித்த 3 என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அந்த படத்தில்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். பின்னர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ரஜினியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படமும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து இயக்கப் போவதாக கூறி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அந்த புதிய படத்திற்கான கதையை தற்போது அவர் எழுதி முடித்து விட்டார். இதையடுத்து நேற்று திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினி, முருகன் திருவடியில் தன்னுடைய புதிய படத்தின் கதையை வைத்து தரிசனம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன .