அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? | ரீ-ரிலீஸில் மோதும் ரவி மோகன், சிவகார்த்திகேயன் | இயக்குனராக அறிமுகமாகும் எஸ்.பி.பி. சரண் | சிம்பு கைவிட்ட கதையை பிடித்த சிவகார்த்திகேயன் | பிளாஷ்பேக் : கிராமங்களில் திரைகட்டி காட்டப்பட்ட சுஹாசினி படம் | இயக்குனர் சீமா கபூரின் சுயசரிதை வெளியீடு : திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | இறுதி கட்டத்தில் '3பிஎச்கே' | 'காளிதாஸ்' 2ம் பாகம் தயாராகிறது | 'மைலாஞ்சி'யில் முக்கோண காதல் | எனது பயோபிக் என்றதும் மிரட்டுறாங்க.... என்னை பேச வைத்து விடாதீர்கள் : சோனா ஆதங்கம் |
தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தின் பாடல் பதிவு ஆரம்பமாகி உள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2022ம் வருடம் வெளியானது. அதன்பின் பல்வேறு காரணங்களால் படத்தின் வேலைகள் தள்ளிப் போனது. வெற்றிமாறன் 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களை இயக்கப் போய்விட்டார். சூர்யாவும் 'கங்குவா, ரெட்ரோ, சூர்யா 45' படங்களில் நடிக்கப் போனார்.
அதனால், ஒரு கட்டத்தில் இந்தப் படம் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் பலமாக எழுந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சூர்யா, வெற்றிமாறன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த தயாரிப்பாளர் தாணு பட வேலைகள் ஆரம்பமாகியதை வெளிப்படுத்தினார்.
இன்று இசையைமப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், இயக்குனர் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, பாடல் பதிவுகள் ஆரம்பமாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.