ஜில்லுனு ஒரு காதலை ஞாபகப்படுத்தும் 'சூர்யா 46' பட போஸ்டர் | மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ் | கேரளாவில் படமான சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் | தனுஷ் பட கிளைமாக்சை மாற்ற இயக்குனர் எதிர்ப்பு | இளையராஜா பெயரை நீக்கிய வனிதா | மீண்டும் கதை நாயகியான சுவாசிகா | மாரீசனுக்காக வடிவேலு ‛வெயிட்டிங்' | தமிழில் முதல் ஏஐ தொழில்நுட்ப இசை ஆல்பம் | ‛ஜென்ம நட்சத்திரம்' நிறைய சொல்லிக் கொடுத்தது : தமன் | பிளாஷ்பேக்: இதய கோவிலை இயக்கியதற்காக வருந்திய மணிரத்னம் |
இயக்குனர் சுந்தர்.சி தமிழில் பல வருடங்களுக்கு மேல் வெற்றி படங்கள் தந்து முன்னனி இயக்குனராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த 'மதகஜராஜா' படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் சுந்தர். சி யின் மவுசு மீண்டும் ஏறியுள்ளது.
தற்போது சுந்தர். சி 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து சுந்தர். சி இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் நடிகர் கார்த்தியை எதார்த்தமாக சந்தித்த வேளையில் கார்த்தியிடம் ஒரு புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இதனால் இருவரும் இணைந்து பணிபுரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாம். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.