ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா இணைந்து நடித்து கடந்த ஆறாம் தேதி திரைக்கு வந்த படம் ‛விடாமுயற்சி'. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. என்றாலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‛குட் பேட் அக்லி' படம் திரைக்கு வந்து அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறி வருகிறார்கள்.
இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், சிம்ரன், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் ‛குட் பேட் அக்லி' படத்தில் திரிஷா, ரம்யா என்ற வேடத்தில் நடிக்கிறார். அவரது லுக் வீடியோ ஒன்றை தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதோடு இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருவதையும் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.