ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
தெலுங்கு திரையுலகில் பிரபாஸ் போல, தமிழில் சிம்புவை போல, மலையாள திரை உலகில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் என்றால் அது இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் தான். கருடா படத்தில் வில்லனாக நடித்த இவர் கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியான மார்கோ என்கிற அதிரடி ஆக்ஷன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. தற்போது அதற்கு முற்றிலும் நேர் மாறாக கெட் செட் பேபி என்கிற ரொமாண்டிக் காமெடி படத்தில் நடித்துள்ளார் உன்னி முகுந்தன். நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது.
இன்னும் திருமணம் செய்யாமல் அதிக அளவில் ரசிகைகளை பெற்றுள்ள உன்னி முகுந்தன் கடந்த ஏழு வருடங்களாக தான் நடித்து வரும் படங்களில் ரொமான்டிக் காட்சிகள், அதிலும் குறிப்பாக கதாநாயகியுடன் நெருக்கமான மற்றும் முத்தக் காட்சிகள் இல்லாதபடி கவனமாக பார்த்துக் கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் கெட் செட் பேபி படத்தில் நிகிலா விமலுடன் இணைந்து ரொமாண்டிக் காட்சிகளில் நடிப்பது சவாலாகவே இருந்தது என்று கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.
“எனக்கு என்னவோ காதல் காட்சிகள் என்றால் ரொம்பவும் நெருக்கமாக கட்டிப்பிடித்தோ அல்லது முத்தம் கொடுத்தோ தான் அதை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்க மாட்டேன்.. இந்த ஏழு வருடங்களில் கிட்டத்தட்ட அப்படியே பழகி விட்டேன். இதனால் என் படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிப்பதற்கு வசதியாக இருக்கும். அதற்காக என் சக நடிகர்கள் அப்படி நடிப்பதை தவறு என்றும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.