மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் அவருக்கே சிம்ம சொப்பனமாக இருந்தவர் ரஞ்சன். பணக்கார வீட்டு செல்ல மகன், நிறைய படித்தவர், குதிரையேற்றம், வாள் சண்டை, குத்து சண்டை, விமான பைலட் என நிறைய தகுதிகள் அவரிடம் இருந்தது.
ரஞ்சனுக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு பனிப்போர் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ரஞ்சன் ஹீரோவாகவும், எம்.ஜி.ஆர் வில்லனாகவும் நடித்த படம்தான் 'சாலிவாகனன்'. இதில் சாலிவாகனனாக ரஞ்சனும், விக்ரமாதித்தனாக எம்ஜிஆரும் நடித்தனர்.
இருவரும் வாள் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி இருந்தது. இதில் முறைப்படி வாள் சண்டை கற்ற ரஞ்சனுக்கு எதிராக எம்ஜிஆர் நாடகத்தில் கற்றதை வைத்து மோதினார். இருவரும் நிஜமாகவே மோதிக் கொண்டார்கள். ரஞ்சன் மூர்கத்தனமாக தாக்கி காயம் ஏற்படுத்துவதாக எம்ஜிஆரும், எம்ஜிஆர் மூர்க்த்தனமாக தாக்கி காயம் ஏற்படுத்துதாக ரஞ்சனும் மாறி மாறி இயக்குனரிடம் புகார் அளித்தனர். அதன்பிறகு சண்டை இயக்குனர் சொல்படி மட்டுமே நடந்து கொள்வது என்று முடிவாகி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
பி.என்.ராவ் இயக்கிய இந்த படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி, கே.எல்.வி.வசந்தா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.எஸ்.பாலையா மற்றும் பலர் நடித்தனர். நாகர்கோவில் கே.மகாதேவன் இசை அமைத்தார். இது 1944ல் தயாரிக்கப்பட்டு 1945ன் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.