24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளீர்கள். அஜித்துடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பபட்டது. இதற்கு விஜய் சேதுபதி கூறியதாவது, ''நிறைய பேர் இந்தக் கேள்வியை கேட்கிறார்கள். இதற்கு முன்பு அஜித் சாருடன் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. அஜித் சார் ஒரு சிறந்த நடிகர், மனிதர். இதுவரைக்கும் நடந்தது எதையும் திட்டமிடவில்லை. ஏதேனும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அஜித் சாருடன் இணைந்து நடிப்பேன். அது நடைபெறும் என நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.