ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
புகழ்பெற்ற அனைவருக்குமே முதல் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும், இல்லாவிட்டால் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். அப்படி ஒரு நிகழ்வு கிருஷ்ணன் - பஞ்சு வாழ்விலும் நடந்தது.
தமிழ் சினிமாவின் முதல் இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. பராசச்தி, பைத்தியக்காரன், நல்லதம்பி, குலதெய்வம், புதையல், தெய்வபிறவி, அன்னை உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினர். இவர்கள் இயக்கிய முதல் படம் 'பூம்பாவை'.
இந்த படத்தின் கதையை கம்பதாசன் எழுதினார், மயிலாப்பூரில் வாழ்ந்த ஒரு தீவிர சிவபக்தையின் கதை. அந்த பக்தையாக யு.ஆர்.ஜீவரத்தினம் நடித்திருந்தார். அவருடன் கே.ஆர். ராமசாமி, கே.சாரங்கபாணி, கே.ஆர்.செல்லம், டி.ஆர். ராமச்சந்திரன், ஏ.ஆர்.சகுந்தலா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், டி.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஆர்.துரைராஜ் மற்றும் 'கொட்டாபுலி' கே.பி.ஜெயராமன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை லியோ பிலிம்ஸ் சார்பில் அடப்ல்லி ராமா ராவ் என்பவர் தயாரித்திருந்தார். கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்கினார்கள். இது அவர்களது முதல் படம். படம் தயாரிப்பில் இருக்கும்போது தயாரிப்பாளருக்கும், இயக்குனர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 80 சதவிகித பணிகள் முடிந்ததிருந்த நிலையில் பாலாஜி சிங் என்ற வடநாட்டு இயக்குனரை கொண்டு படத்தின் மற்ற பணிகளை முடித்தார் தயாரிப்பாளர்.
படத்தின் டைட்டிலில் 'இயக்கம் பாலாஜி சிங்' என்றும், 'மேற்பார்வை கிருஷ்ணன்-பஞ்சு' என்றும் இடம் பெற்றது. என்றாலும் மனம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து 3 வருடங்கள் போராடி என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து, நடித்த 'பைத்தியக்காரன்' படத்தை இயக்கி பெரும் புகழ் பெற்றனர்.