துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
பிரபல எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டி எழுதிய நாவல் 'அலைகள் ஓய்வதில்லை'. கடல்புறத்து மீனவ மக்களின் வாழ்க்கையையும், அவர்களது காதலையும் யதார்த்தமாக சொன்ன நாவல். இந்த கதையைத்தான் சிவகுமார், ராதா, அருணா, சிவச்சந்திரன், கவுண்டமணி நடிக்க 'ஆனந்த ராகம்' என்ற பெயரில் படமாக இயக்கினார் பரணி. நாவலை திரைக்கதையாக மாற்றியவர் பஞ்சு அருணாசலம்.
நாவலில் இருந்த மீனவ மக்களின் வாழ்வியலை விட்டு விட்டு காதலை மட்டும் எடுத்துக் கொண்டு அதையும் சொதப்பி உருவானது படம். கடும் விமர்சனத்தை சந்தித்த படம் பெரும் தோல்வியை தழுவியது. படத்தை ஓரளவிற்கு காப்பாற்றியதும், நிலைத்து நின்றதும் இளையராஜாதான். கடலோரம்..., கனவுகளே... மேகம் கருக்குது... ஒரு ராகம் ஆகிய பாடல்கள் இப்போதும் ஒலித்துக் கொண்டது.
பின்னாளில் நாவல் ஆசிரியர் தாமரை செந்தூர் பாண்டி தனது நாவலை திரைப்படமாக்கி சிதைத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். அதன்பிறகு தனது நாவல்களை தானே படமாக இயக்கினார்.