வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படம் முடிவடைந்து 2017ம் ஆண்டே வெளியாகும் என்று அறிவிப்புகள் வந்தது. ஆனால், அப்போது படம் வெளியாகவில்லை. அதன்பின் சில முறை பட வெளியீடு பற்றி அறிவிப்பு வரும், ஆனால் படம் வராது. கடைசியாக கடந்த வருடம் 2024ல் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவித்தும் அப்போதும் வெளியாகவில்லை.
இதனிடையே, படம் முடிந்து 12 ஆண்டுகளாக வெளியாகாத 'மத கஜ ராஜா' படம் பொங்கலுக்கு வெளியாகி 50 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. அதையடுத்து 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட தேங்கி நிற்கும் படங்கள் சிலவற்றை வெளியிட திரையுலகினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், 'துருவ நட்சத்திரம்' படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு வருவதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். 'மத கஜ ராஜா' படம்தான் அதற்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.