‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
இயக்குனர் கே.பாக்யராஜும், மணிவண்ணனும் ஒரே காலகட்டத்தில் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர்கள். பாக்யராஜ் பாரதிராஜாவிடமிருந்து பிரிந்து வந்து பல படங்களை இயக்கிய பிறகு இயக்குனர் ஆனவர், மணிவண்ணன். இவர் தீவிர இளையராஜா ரசிகர். இளையராஜாவிற்கும் மணிவண்ணனை பிடிக்கும். இதனால் தயாரிப்பாளர் கலைமணியிடம் மணிவண்ணனுக்கு சிபாரிசு செய்தார். அப்படி கிடைத்த முதல் வாய்ப்புதான் 'கோபுரங்கள் சாய்வதில்லை' படம்.
மணிவண்ணனின் முதல் படமே வெள்ளி விழா கண்டது. அழகான மோகனுக்கு அழகில்லாத அருக்காணி சுஹாசினியை மணமுடித்து விடுவார்கள். மோகன் ஸ்டைலான ராதாவோடு வாழ்வார். அந்த வீட்டுக்கு சுஹாசினியை வேலைக்காரியாக அழைத்து செல்வார் மோகன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை. படத்தில் சுஹாசினியின் நடிப்பு பேசப்பட்டது. தேசிய விருதுகூட கிடைக்கும் என்றார்கள்.
இந்தப் படம் வெளியானபோது வெளியிட்ட விளம்பரங்களில் மணிவண்ணனும், கே.பாக்யராஜும் ஒருவரை மோதிக் கொள்வது போன்று வாளோடு நிற்கும் படத்தை போட்டு பாரதிராஜாவின் சிஷ்யர்களில் சிறந்தவர் யார்? கே.பாக்யராஜா, மணிவண்ணனா? என்று கேப்சன் போட்டிருந்தார். இது ஒரு வேடிக்கையான விளம்பரம் என்று சொன்னாலும், பாரதிராஜாவிடம் பணியாற்றிய காலத்தில் இருவருக்கும் இடையில் ஒரு மவுனயுத்தம் நடந்து கொண்டிருந்தது அதன் வெளிப்பாடுதான் இந்த விளம்பரம் என்றும் சொல்வார்கள்.