துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க 2017ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட சரித்திரப் படம் 'சங்கமித்ரா'. படம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் அப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகினார். அவருக்குப் பதிலாக திஷா பதானி நடிப்பதாகவும் அறிவித்தார்கள்.
ஆனால், ஏழு வருடங்களாகியும் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் இருந்தது. இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 50 வது ஆண்டு அடுத்த வருடம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக 'சங்கமித்ரா' படத்தை மீண்டும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் படத்தை மீண்டும் ஆரம்பிக்க உள்ளார்களாம். படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதும் மற்ற கலைஞர்கள் பற்றியும் அறிவிப்புகள் அடுத்தடுத்து வரலாம்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தைத் தயாரித்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 24ல் இப்படம் வெளியாக உள்ளது. இதையடுத்து மேலும் சில படங்களை வினியோகவும் செய்யவும், தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.