Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: கே பாக்யராஜ் என்ற புதிய நாயகனை வார்த்தெடுத்த “புதிய வார்ப்புகள்”

13 ஜன, 2025 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Flashback:-Puthiya-Vaarpugal-featuring-a-new-hero-named-K-Bhagyaraj


1977ம் ஆண்டு வெளிவந்த “16 வயதினிலே” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றி, ஒரு பெரும் புரட்சியையே உண்டு பண்ணியவர்தான் இயக்குநர் பாரதிராஜா. பின்னாளில் தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குனர்களாக பார்க்கப்பட்ட மணிவண்ணன், மனோபாலா, கே ரங்கராஜ் போன்றோர் கூட, பாரதிராஜா என்ற பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடும்படியான ஒரு தலைசிறந்த மாணவர்தான் இயக்குநர் கே பாக்யராஜ்.

பாரதிராஜாவின் “16 வயதினிலே” திரைப்படத்தில் ஒரு உதவியாளராக அறிமுகமாகி, அவரது “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “நிறம் மாறாத பூக்கள்”, “புதிய வார்ப்புகள்”, “ஒரு கைதியின் டைரி” போன்ற ஒரு சில படங்களில் இணைந்து பணிபுரிந்து வந்த இயக்குநர் கே பாக்யராஜ் அவரது குருநாதரான இயக்குநர் பாரதிராஜாவால்தான் கதாநாயகன் அவதாரமும் எடுத்தார்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த கே பாக்யராஜ், பாரதிராஜாவின் சொந்தப் படமான “புதிய வார்ப்புகள்” திரைப்படத்திற்கும் வசனம் எழுதிக் கொண்டிருந்தார். படத்தின் நாயகி வேடத்திற்கு அப்போது மாடல் அழகியாக இருந்த ரத்தி அக்னிஹோத்ரியைத் தேர்வு செய்துவிட்டுக் கதாநாயகனாக நடிக்க வைக்க ஒரு புது முகத்தைத் தேடிக் கொண்டிருந்த பாரதிராஜாவின் முதல் தேர்வு இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், திரைத்துறை வித்தகருமான கங்கை அமரனாக இருந்தார். அதன்பின் அவர் பார்த்த பலரும் பொருந்தி வராததால் தனது யூனிட்டில் இருந்த கே பாக்யராஜுக்கு கண்ணாடி அணிவித்து, வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துப்பார்த்து விட்டு அவரையே தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவித்தார் இயக்குநர் பாரதிராஜா.

நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு ஓடி வந்த கே பாக்யராஜ், இரண்டு இயக்குனர்களிடம் உதவி இயக்குநராகவும், இரண்டு திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனகர்த்தாவாகவும், இரண்டு படங்களில் எடுபிடி நடிகராகவும் பணியாற்றிய பின்னர் ஓர் அரிய வாய்ப்பாக கிடைத்ததுதான் இந்த “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் வரும் பள்ளி ஆசிரியர் சண்முகமணி என்ற கதாநாயகன் கதாபாத்திரம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸின் மணப்பெண் இந்த ஊரை சேர்ந்தவர்: நடிகர் ராம்சரண் கொடுத்த 'க்ளூ'பிரபாஸின் மணப்பெண் இந்த ஊரை ... வெற்றிமாறன் - தனுஷ், மதிமாறன் புகழேந்தி - சூரி : ஒரேநாளில் இரு பட அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் வெற்றிமாறன் - தனுஷ், மதிமாறன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)