துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
வேட்டையன் படத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கிறது. அதற்காக ரஜினிகாந்த் இன்று (ஜன.7) சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது : கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் வரை முடிந்துவிட்டது. அடுத்த படப்பிடிப்பு ஜன 13ல் முதல் 25 வரை நடக்கிறது என்றார்.
அப்போது நிருபர்களில் ஒருவர், அரசியல் தொடர்பான கேள்வி ஒன்றை கேட்க முனைந்தார். இதனால் டென்ஷனான ரஜினி, ‛அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஓகே, தேங்க்யூ' என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.