ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
பிரைன் டச் பிலிம் பேக்டரி சார்பில் ஆர்.முருகானந்த் தயாரிக்கும் படம் 'பூர்வீகம்'. கிருஷ்ணன் இயக்குகிறார். கதிர், மியாஶ்ரீ, போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, சூசன், ஶ்ரீ ரஞ்சனி, ஷாஸ்னா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய்மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாணக்யாக இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணன் கூறியதாவது: நம் நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம். இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிலுக்காகவும் முழுமையாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாசாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும், அப்படியே உதறி தள்ளிவிட்ட விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
உலகமெங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும். ஆகவே தனி மனிதனோ அரசாங்கமோ விவசாய நிலத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் படித்தவனோ பாமரனோ அரசனோ ஆண்டியோ யாராக இருந்தாலும் அவன் வாரத்தில் ஒரு நாளாவது விவசாயத்தில் ஈடுபடவேண்டும். இப்படி ஒவ்வொருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் வளம் பெருகும். வாழ்வும் சிறக்கும். இதைத்தான் இந்த படத்தில் ஆழமாக கூறியுள்ளோம். என்றார்.