லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதற்கேற்றார்போல் சேனல்களும் புதுப்புது கதைகளங்களுடன் தரமான சீரியல்களை தயாரித்து வருகின்றன. ஒரு காலத்தில் பிறமொழிகளிலிருந்து சீரியல்களை ரீமேக் செய்து வந்த நிலைமாறி தற்போது தமிழில் உருவாகும் சீரியல்கள் பிறமொழிகளில் ரீமேக் ஆகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடரை அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. தமிழில் நவீன், ஸ்வேதா, ஓஏகே சுந்தர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.